கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இடைக்கால தடை!


கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.ஏ. மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments