புல்மோட்டையில் காணி தகராறு ; இருவர் படுகொலை


திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான காணி தகராறில் இரண்டு பேர் உயிரிழப்பு. 

மேலும் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

புல்மோட்டை பாலம்குளம் பகுதியில் வயல் காணி தொடர்பில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் மோதலாக மாறியதில் இரு குடும்பத்தினரும் தமக்குள் மோதிக்கொண்டுள்ளனர். 

அதில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments