உலகிலேயே நீண்ட பாதங்களுடைய பெண் இவர் தான்!!


உலகிலேயே மிகப்பெரிய பாதங்களுடன்  அமெரிக்காவில் பெண் ஒருவர் காணப்படுகிறார்.

டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 38 வயதான தான்யா ஹெர்பர்ட் என்பவரின் பாதம் 33 சென்டி மீட்டர் நீளத்தில் உள்ளது. 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட அவரின், இடது கால் பாதத்தைவிட, வலது கால் பாதம் சற்று நீளமாக உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பாதங்கள் கொண்ட பெண் என்ற உலக சாதனையை தான்யா படைத்துள்ளார்.

தனக்கேற்ற நல்ல காலணிகளை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ள தான்யா, கின்னஸ் உலக சாதனையின்படி உலகில் வாழும் மிக உயரமான பெண்ணைவிட, உயரத்தில் 3 அங்குலம் குறைவாக உள்ளார்.


No comments