நிலச்சரிவில் மலேசியாவில் 16 பேர் பலி! மேலும் பலரரைக் காணவில்லை!

மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துடன் மேலும் 20க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலப் பகுதியில் முகாம் ஒன்றில் கூடாரங்கள் வாழ்ந்த மக்களே நிலச்சரிவில் சிக்கிப் புதையுண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர்.

94 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களில் 61 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 17 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments