முல்லையில் துப்பாக்கியுடன் கைதுமுல்லைத்தீவு மாங்குளம் கல்குவாரிப் பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி, 100 கிராம் ஈயம், துப்பாக்கி மருந்துகள், வாள் மற்றும் மான் கொம்புகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நேற்றைய தினம் மாங்குளம் பகுதியில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய வீடொன்றை சோதனைக்குட்படுத்தினர். இதன்போது உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments