முல்லையில் துப்பாக்கியுடன் கைது

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

அந்தத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 578 தனியார் ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயிரத்து 317 தனிப்பட்ட ஊழியர்களைக் பணிக்கமர்த்தியுள்ளதுடன், 2015 முதல் 2019 வரை 850 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதவியேற்ற இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்ப்பேன் என  வலியுறுத்தி ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் ஊழியர்களை பராமரிக்க அதிக பணத்தை செலவு செய்துள்ளதாக  ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றுக் கொள்கை மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே 2019ஆம் ஆண்டு உரிய தகவல்களை கோரியிருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி செயலகத்தின் தீர்மானத்திற்கு எதிரான மேன்முறையீட்டை பரிசீலித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், 2022 நவம்பர் 14 ஆம் திகதி இது தொடர்பான தகவல்களை வெளியிட அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments