மேலும் கஞ்சா அகப்பட்டது!
இலங்கைக்கு கடத்த முயன்ற 22 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா மற்றும் படகை பறிமுதல் மூன்று பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாப ராமபுரம் ஊராட்சி செருதூர் பாலத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் அங்கு சென்று சோதனை செய்ததில் சந்திரன் என்பவர் சொந்தமான படகில் இருந்து 220 கிலோ கஞ்சாவை நாகை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து புஷ்பவனத்தைச் சேர்ந்த அருள்அழகன் காஞ்சிநாதன் நாலுவேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் ஆகிய மூன்று பேரை கைது நாகை சுங்கத்துறையினர் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 22 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
Post a Comment