இலங்கையின் உள்நாட்டு நாணயக்கடன் மதிப்பீட்டை தரமிறக்கியது ஃபிட்ச்


ஃபிட்ச், தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு  நாணயக்கடன் மதிப்பீட்டை மீண்டும் ஒருமுறை தரமிறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையின் நீண்ட கால தேசிய  நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (ccc ) சீசீசீ இலிருந்து (cc ) சீசீக்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.

இலங்கை அதன் தேசிய  நாணயக் கடனைத் தொடர்கிறது,  ஏற்றுக்கொள்ள முடியாத உயர் உள்நாட்டு வட்டி செலுத்துதல், வருவாய் விகிதத்தைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் நாணயக் கடனைத் திருப்பிச் செலுத்துவது சாத்தியமில்லை என தாம் கருதுவதாகவும்,  வட்டிச் செலவுகள், இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் மற்றும் உயரும் உள்நாட்டு நாணயக் கடன் ஆகியவை உயர் உள்நாட்டு நிதித் தேவைகளின் பின்னணியில், 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% இருக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளதாக ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கும் வகையில்,இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீட்டையும் ஃபிட்ச்,  உறுதிப்படுத்தியுள்ளது.

No comments