பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது!


நீர்கொழும்பு கொச்சிக்கடை காவல் பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்து வருபவர் என்கிற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து  கஞ்சா கலந்த 354 கிராம் பாபுல் போதை பொருட்கள்

கைப்பற்றப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரை நாளை (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments