பாரவூர்த்தியில் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் கைது


இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் மறைந்து பயணித்த பாரவூர்திகளை, ரோமானிய எல்லைக்காவல் பிரிவான, அராட் எல்லைக்காவல் படையினர் தடுத்துள்ளனர்.

இதன்போது பங்களாதேஸ், எரித்திரியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

புடவைத்துணிகள் மற்றும் உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனங்களுக்குள் மறைந்திருந்து, சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ஹங்கேரிக்குள் ஊடுருவ முயன்றபோதே இந்த 27பேரும் அராட் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

முதலாவது சம்பவத்தில் ரோமானியர் ஒருவரால் ஓட்டிச்செல்லப்பட்ட கனரக வாகனத்தில் மறைந்த பயணித்த 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மேலும், நொட்லொக் எல்லையில மற்றும் ஒரு ரோமானியர் ஓட்டிச் சென்ற உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட கனரக வாகனத்தில் இருந்து 11பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த சட்டவிரோத பயணங்கள் குறித்து மேலும் பல தகவல்களை கண்டறிய அராட் எல்லைக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments