மாங்குளத்தில் டாக்கி மோதி படைச் சிப்பாய் பலி!


முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவிலில் பகுதியில பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறீலங்காப் படையினர் ஒருவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட இராணுவ டாங்கி மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொக்காவிலில் உள்ள முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம, சிறிமாபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments