நிலச்சரிவில் பேருந்து புதையுண்டதில் 34 பேர் பலி!!


கொலம்பியாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பேருந்து ஒன்று புதையுண்டதில் 34 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ரிசரால்டா மாகாணத்தில் உள்ள பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா கிராமங்களுக்கு இடையேயான சாலையில் நடந்தது. 

மீட்புப் பணியாளர்கள் சேற்றில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்காக தோண்டி வருகின்றனர். மேலும் ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், 7 வயது சிறுமி, இறந்து போன தனது தாயுடன் ஒட்டிக் கொண்டிருந்ததாக ரிசரால்டா கவர்னர் விக்டர் தமயோ தெரிவித்தார்.

அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ட்விட்டர் செய்தியில் இந்த சம்பவத்தை ஒரு சோகம் என்று விவரித்தார்.

உயிரிழந்தவர்களில் எட்டு பேர் சிறார்கள் என்று யுஎன்ஜிஆர்டி தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் மலைப்பாங்கான நிலப்பரப்பு, அடிக்கடி பெய்யும் கனமழை மற்றும் முறைசாரா வீடுகள் கட்டுதல் போன்ற காரணங்களால் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments