முச்சக்கரவண்டி விபத்து ரஷ்யப் பெண் உட்பட இருவர் பலி!ஹபராதுவ, தலவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று அதிவேக தொடரூந்துடன் மோதியதில் ரஷ்ய பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை ஹரம்ப தொடரூந்துக் கடவை ஊடாக பயணித்த முச்சக்கரவண்டி பெலியத்த - வவுனியா விரைவு தொடரரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த ரஷ்ய பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது கடவையில் சமிக்ஞை விளக்குகள் இயங்காத போதிலும், லெவல் கிராசிங்கின் ஊடாகச் செல்லும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments