அரியாலையில் விபத்து ஒருவர் பலி!


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தொடருந்துடன் மோதி சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை  நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தொடருந்து அரியாலை ஏ.பி.  வீதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் வைத்து சிற்றூர்தி ஒன்று குறித் தொடருந்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் அரியாலையைச் சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் ஆவார்.

குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த காவல்துறையினருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் சம்பவ இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அதனையடுத்து அவ்விடத்தில் மேலதிக அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments