பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச் சுடரினை கப்டன் சூரியத்தேவன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து, மலர் வணக்கத்தினை செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செலுத்தினர்.

சென்தனி தமிழ்ச்சோலை மற்றும் பொண்டி தமிழ்ச்சோலை மாணவியரின் எழுச்சி நடனங்கள், மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும் சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றன.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

No comments