பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியது அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்


ஒரு தமிழரின் இழிவான செயலால் மாவீரர்கள் துயில் கொள்ளும் முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தற்போது பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது. 

மண்ணுக்குள் உறக்கிக்கொண்டிருந்த மாவீரர்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டு அதன் மேல் பிரபா வர்த்தக குழுமம் கம்பனி (பிரைவேட்) praba trading group of companies (pvt) ஒன்றினால் வர்த்தகக் கட்டிடத் தொகுதி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

அக்கட்டிடத் தொகுதியில் முதற்கட்டமாக பிரபா பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ஏனைய வணிகக்கடைகள் மற்றும் தனியார் மருத்துவமனையும் வரவிருப்பது காணொளியைப் பார்ப்பதன் மூலம் தெரியவருகிறது.

ஆஸ்ரேலியாவில் வாழும் முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைச் சேர்ந்த ஜெயராசா பிரபாகரன் என்று அழைக்கப்படும் பிரபா என்ற புலம்பெயர் தமிழனின் பணம் இன்று மாவீரர்களின் புதைகுழிமேல் வெறும் கட்டிடமாக நிமிர்ந்து. இவர் மாவீரர் துயிலுமில்ல நிலத்தை வாங்குவதற்காக பணத்தை வழங்கியிருந்தார். தற்போது அது பிரபா பல்பொருள் அங்காடியாக (பிரபா சூப்பர் மார்கெட்) மாறியுள்ளது.


ஏற்கனவே சிங்கப்படைகளால் கற்லறைகள் மற்றும் நினைவுற்கற்கள் தரை மட்டமாக அழிக்கப்பட்ட பின்னரும் மாவீரர்கள் அந்த மண்ணில் துயில்கொண்டு இருந்தார்கள்.

இம்முறை நடைபெற்ற மாவீரர் நாள் இந்த வணிக்கட்டி வீதிக்கு முன் நின்று மாவீரர்களின் உறவுகள் சுடரேற்றி வணக்கம் செலுத்தியிருந்தனர்.

காண அபகரிப்பு மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்திய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளைச்  சேர்ந்த அரசியல் வாதிகள் இந்த மாவீரர் துயிலுமில்ல நில அபகரிப்பை எப்படி கோட்டை விட்டார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

No comments