விருது பெற்றவர்களும் சிறையிலா?


சாகித்திய விருது பெறும் அளவு சிறந்தவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் தொடர்பில் இன, மத, பேதங்களை கடந்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலர் உள்ளனர். 10, 15 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் அவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர்.

நீதிமன்றில் வழக்குகள் தொடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் சிறைச்சாலைக்குள் இருக்கின்றனர்.

அவர்களை தனிப்பட்ட ரீதியில் சென்று சந்தித்து இருக்கின்றேன். அவர்களில் ஒருவராக சிவலிங்கம் ஆருரன் என்பவருக்கு அண்மையில் அரச சாகித்திய விருது விழாவில் விருது கிடைக்கப்பெற்றது.

இரண்டு தடவைகள் அவருக்கு சாகித்திய விருது கிடைக்கப்பெற்றது. முதலாவது தடவையாக கிடைக்கும்போது அந்த விருதை பெற்றுக்கொள்வதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் இம்முறை அதிகாரிகளின் அனுமதியுடன் அவர் அந்த விருதை நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார். 12 வருடங்களாக அவர் சிறைச்சாலைக்குள் இருக்கின்றார். இவ்வாறான சிறைக்கைதிகள் பலர் சிறைச்சாலைக்குள் இருக்கின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட 6 பேர் இருக்கின்றனர்.

தேவதாசன் என்ற கைதியையும் சந்திப்பதற்கு கிடைத்தது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவராவார். புதிதாக முன்மொழியப்பட்ட சட்டமூலத்துக்கு அமைவாக அவர் நோயாளி என்பதால் அவர் விடுவிப்பதற்கு முடியும்.

சிவலிங்கம் ஆருரன் என்பவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போது அவர் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்ள முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கும்; பட்டதாரி ஆவார்.அவர் பேராதனை பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். இளம் பொறியியலாளர் ஆவார்.

சிறைச்சாலைக்குள் அவர்களுக்கு சுந்திரமாக கலந்துரையாடுவதற்கான வாய்;ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் தவறான வழியில் பயணிக்கவில்லை. அவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கே விரும்புகின்றனர். இன, மத. பேதங்களை கடந்து இவர்கள் தொடர்பில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். இதற்காக எதிர்க் கட்சியின் என்ற முறையில் எமது ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம  எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


No comments