மதிய உணவு:சீன சீருடை அடுத்து!இலங்கையில் மதிய உணவிற்கான அரசின் அனபளிப்பினை தொடங்கிய சீனா தற்போது சீருடைகளை வழங்கவும் முன்வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முழு நாட்டின் தேவையில் 70% பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 90 மில்லியன் RMB (5 பில்லியன் LKR) மதிப்பிலான பள்ளி சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 20 கொள்கலன்கள் ஊடாக 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்படுவதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments