யாழ்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம்!


சுற்றுச்சூழல் கல்வி முகாம் "forut  friends" அமைப்பினர்களினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது.        

இந் நிகழ்வில் காலநிலை மாற்றம் குறித்த விரிவுரைகளை 

வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன் வழங்கி இருந்தார்.

 மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு சுற்றுச்சுழல் சம்மந்தமான தங்கள் கேள்விகளுக்கு பதில்களை பெற்றுக்கொண்டனர். 

அதனை தொடர்ந்து பயிற்சி  முகாமில் கலந்துகொண்ட மணவர்களுக்குப் பயன் தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டு பாடசாலை வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.No comments