பூப்பந்தாட்டத்தில் சாதிக்கத் தெரிந்த இளைய தமிழ் வீரன் சஞ்ஜீவிக்கு ஆதரவை வழங்குவோம்தனது இளைய வயதிலேயே யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி

யேர்மனிய தேசிய பட்மின்ரன் விளையாட்டின் U19 வயதுமட்டத்தினருக்கான பிரிவிலே சஞ்ஜீவி பத்மநாகன் வாசுதேவன் விளையாடுகிறார்.

அவர்களின் அதீதமான திறமையைக் கருத்திற்கொண்டு முன்னணி விளையாட்டுச்சஞ்சிகையான Badminton Sport சஞ்ஜீவியை இந்தப் போட்டிப்பிரிவின்  2022 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த வீரனுக்கான முன்னணித்தேர்விற்குத் தெரிவுசெய்துள்ளது. இது மட்டுமன்றி இவரது துரிதமான ஆட்டத்திறமை காரணமாக நடக்கப்போகும் ஐரோப்பிய மற்றும் உலகமட்டப் போட்டிகளிலே விளையாடுவதற்கான வீரர்களின் அணிக்கும் முதற்கட்டம் இவர் தெரிவாகியுள்ளார்.

இவர் பட்மின்ரன் U19 ஒற்றறைர் ஆட்டவீரர் வரிசையிலே தற்போது ஐரோப்பிய மட்டத்திலே 5ஆவது இடத்திலும், உலகளாவிய மட்டத்தில் 17ஆவது இடத்திலும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தமிழரான உலகமட்டத்தில் கலந்துகொண்டு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இளம்வீரன் சஞ்ஜீவியை இறுதிக்கட்டத்தெரிவிற்கு அனுப்புவதற்கு உங்களின் பங்களிப்பும் தேவையாயுள்ளது. அந்தவகையில் ஆகிய மையங்களைச்சேர்ந்த தெரிவுக்குழுவின் ஊடகப்பேச்சாளராகிய கிளெடியா பௌலி அவர்களின் claudia.pauli@cp-presse.de மின்னஞ்சலுக்கு Sanjeevi Padmanabhan Vasudevan இன் பெயரைக்குறிப்பிட்டு 04.02.2022 இற்கு முன்னதாக அனுப்பிவைப்பதன் மூலம் எங்களின் ஆதரவை வழங்கமுடியும்.

https://ga.de/sport/ga-sportlerwahl/bonn-wer-wirdga-sportler-des-monats-november-fuenf-nominierungen_aid-81431567

https://www.facebook.com/100063561401757/posts/unser-nachwuchsspieler-und-frisch-gebackener-deutscher-meister-sanjeevi-padmanab/599058245556217/


No comments