10ம் திகதி வவுனியா,மட்டக்களப்பில் பேரணி!வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களிற்கான இழப்பீடு பற்றி இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மீண்டும் போராட்டத்திற்கு வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன.

அவ்வகையில் வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மனித உரிமைகள் தினமான வருகின்ற 10ம் திகதி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுக்கவுள்ளதாக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடையவுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கான பேரணியானது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.


No comments