சமையல் கட்டிலிருந்த பிள்ளையானிற்கு எனன தெரியும்?பன்னிப்பிட்டிய முகாம் இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து கொலை கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில்  பிள்ளையான் குழு ஈடுபட்டிருந்தது. பிள்ளையான் போன்ற துரோகிகள் தங்களின் துரோகங்களை மறைப்பதற்காக பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கந்தசாமி இன்பராஜா தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பிள்ளையான் விடுதலை புலிகள் இயக்கத்தில் சமையல் பகுதியில் இருந்த ஒருத்தர். பன்னிப்பிட்டிய இராவ கட்டளை தளபதியுடன் இணைந்து கொலை கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில்  பிள்ளையான் குழு ஈடுபட்டிருந்தவர்.

பிள்ளையான் போன்ற துரோகிகள் தங்களின் துரோகங்களை மறைப்பதற்காக விடுதலைப்புலிகளது தலைமை தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இத்தகைய நபர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டுமெனவும் கந்தசாமி இன்பராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 


No comments