அல்லக்கைகள்:அதிரடிப்படைக்கு பொன்னாடைபணி இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட  அதிரடிப் படையினர் வட மாகாண  கட்டளை அதிகாரி டிடிடிகே ஹெட்டியாராச்சியை கௌரவிக்கும் நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாட்டு பிரதிநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை யாழ் கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட அதிரடி அடிப்படையின் வட மாகாண கட்டளை அதிகாரி டிடிடிகே ஹெட்டியாராச்சி பொன்னாடை போர்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

என் நிகழ்வில் குளோபல் அசோசியேசன் ஐரோப்பாவுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதனின் அன்பளிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தலா 25,000 ரூபாய் காசோலைகள் இரண்டும், வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பத்தில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் காசோலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன ,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராஜா, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments