நீதிமன்றிற்கு தீவைத்தததும் பிள்ளையான் அணியே?


அக்கரைப்பற்று நீதிமன்ற பதிவு அறையில் தீ வைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பிலும் இந்த சம்பவத்தில் பிரதான நெருங்கிய  குற்றவாளியாக  இனிய பாரதி என்அழைக்கப்படுகின்ற புஸ்பகுமார்  இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல் கொலை கொள்ளை கஞ்சா கடத்தல்   காணமால் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் இவர் மீது உள்ளன.

ஏற்கனவே 2007 ம்   ஆண்டு நான் திருக்கோவில்  சந்தைக்கு அடிக்கல் நாட்ட வந்தவேளை   இனிய பாரதி என்கின்ற புஸ்பகுமாரினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேருவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலுக்கெதிராக நீதிமன்றில் வழக்கு தொடுத் வழக்கின் தீர்ப்பு 3 ஆண்டுகளின் பின் 2010 ம் ஆண்டு கிடைத்திருந்தது.

இனிய பாரதி என்கின்ற புஸ்பகுமார் என்பவரின் செயற்பாடுகள்  தொடர்பில் இதுவரை  ஐக்கிய நாடுகள் சபை மனித  உரிமைகள்ள ஆணையகம் வரை  அறிக்கைகைகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments