82 வயதில் காலமானார் பிரேசில் கால்பந்து நட்சத்திரமான பீலே


பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் பீலே (எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 82 வயதான பீலேவுக்கு குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இவர் சமீப காலமாக சிறுநீரகம் மற்றும் புரோஸ்டேட் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் இருந்து வந்தது. சாவோ பாலோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வருட வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தார். இதில் 92 போட்டிகளில் 77 கோல்கள் அடங்கும். கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்தவர் பீலே.

1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர். பீலே 2000 ஆம் ஆண்டில் ஃபிஃபாவின் நூற்றாண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார்.

பீலேவின் மறைவிற்கு உலக கால்பந்து இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


No comments