நல்லூர் கோவில் வீதியில் உள்ள விடுதியில் நின்றவர் மீது வாள் வெட்டு!


யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞனொருவர் காயமடைந்துள்ளார். 

பண்டத்தரிப்பு அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் கலைக்ஸன் (வயது 21) எனும் இளைஞனே காயமடைந்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

மூன்று மோட்டார் சைக்கிளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 08மணியளவில் வந்த வன்முறை கும்பல் விடுதியில் நின்றவர் மீது  வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments