யாழில். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்றவர் கைது!





பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து , கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கினை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கினை கைப்பற்றியுள்ளதாகவும் , குறித்த நபர் நீண்ட காலமாக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 




No comments