பிளவு நல்லது:அரியநேத்திரன்!


விகிதாசாரதேர்தல் முறையில் சகல தேர்தல்களும் இடம்பெற்றால் பிரிந்து கேட்பது தவறு  என விளக்கமளித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான அரியநேத்திரன்.ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்போதுள்ள கலப்பு தேர்தல் முறையில் 2018, ல் தனித்து ஒருகட்சி ஆட்சியமைக்கும் சூழல் ஏற்படவில்லை,

வட்டாரங்களில் கூடிய ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்றும் கூட வட்டாரங்களில் பட்டியலில் நியமிக்கப்பட்ட வேறு கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பலகட்சிகளின் ஆதரவுகளில் தங்கியே ஆட்சியமைத்த வரலாறுகள் உண்டு.

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியாக உள்ளுராட்சி்சபை தேர்தலில் கடந்த 2018, தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் மூன்று கட்சியிலும் வெற்றிபெறும் மற்றும் பட்டியலில் உள்ளவர்கள் இணைந்து முழுமையாக தமிழ்தேசியகூட்டமைப்பு வடக்கு கிழக்கில் பல சபைகளை தனித்து ஆட்சியமைத்திருக்க அதிக வாய்ப்பும் சாதகமும் வந்திருக்கும் என்பதை கடந்த கால தேர்தல் அனுபவம் பாடம்புகட்டி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டே தமிழ்தேசிய கூட்டமைப்பில் தற்போது உள்ள மூன்று பங்காளிக்கட்சிகளும் ஆராயவேண்டும் என  கூட்டத்தில் கூறப்பட்டது. அது முடிவல்ல.

விகிதாசார தேர்தல் முறையானால் நீங்கள் கூறுவது போன்று ஒரே கூட்டில் ஒரே சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி கூடிய ஆசனங்களை பெறலாம்.

கலப்ப்பு தேர்தல் முறைக்கு தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் வேறு மாற்றுக்கட்சிகளின் ஆதரவில் தங்கி நிற்கும் நிலை வராது என விளக்கமளித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான அரியநேத்திரன்.

No comments