கொழும்புக்கு 35:யாழ்ப்பாணத்துக்கு 20!யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியுள்ள நிலையில் விமான சேவை கட்டணத்தை குறைக்காத இலங்கை அரசு பயணிகள் எடுத்து வரும் பொதி நிறையை மட்டுப்படுத்தி பயணிப்போர் எண்ணிக்கையினை மட்டுப்படுத்த முற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற தனியார் விமான சேவை நிறுவனம் வாரமொன்றுக்கு நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை இன்று ஆரம்பமாகியுள்ளது.

எனினும் கொழும்பிலிருந்தான விமான சேவைகளின் போது தனியார் ஒருவர் எடுத்துவரக்கூடிய பொதியின் நிறை 35 கிலோகிராம் ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது.


No comments