காணாமல் போன மீனவர் 16 நாட்களின் பின் மீட்பு


திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவரொருவரை 16 நாட்களுக்கு பின்னர், இலங்கை கடற்படையினர் நேற்று (11) மீட்டனர்.

5 மீனவர்களுடன் பயணித்த “ஹிம்சரா” பல நாள் மீன்பிடி படகு பாதகமான காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது.

அனார்த்தம் பற்றிய தகவல் கிடைத்தது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் கடற்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடற்படையினர் உள்ளூர் மீன்பிடி படகின் உதவியுடன் கவிழ்ந்த விசைப்படகில் இருந்து மூன்று மீனவர்களை மீட்டதுடன், காணாமல் போன இரண்டு மீனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்நிலையிலேயே குறித்த மீனவர் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர், மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எல்என்எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர்.

No comments