மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்

வடமாகாணத்தின் ஜந்தாவது மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை கல்விப்பணிப்பாளராக இருந்த செல்லத்துரை உதயகுமார் ஓய்வு பெற்றதனையடுத்து யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தீவக மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கல்விப்பணிப்பாளராக பணியாற்றியிருந்த யோன் குயின்ரஸ் மாகாண கல்வி திணைக்களத்தில் பிரதி பணிப்பாளராக பணியாற்றிய நிலையில் புதிய பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


No comments