அனலைதீவிலும் வேண்டாம்! டக்ளஸ் அன்கோவின் கடலட்டை பண்ணைகளிற்கு எதிரான பேராட்டங்கள் முனைப்படைந்துள்ளன.

யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சார்பில் நேற்று வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

அட்டைப் பண்ணைகளின் ஆக்கிரமிப்பால் அன்றாடம் கடற்றொழிலை நம்பி வாழ்ந்த இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டொன் பொஸ்கோ மற்றும் செயலாளர் ஆகியோர் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து ஆளுநருக்கான மகஜரைக் கையளித்தனர்.


No comments