போதைபொருள் வியாபாரிகளை நாடுகடத்த முயற்சி!

 


இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிற்கு சென்று அவர்கள் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு விசேட குழுவொன்றை பெயரிடவுள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் குறித்த குழுவை இந்தியாவுக்கு அனுப்பி அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது இலங்கையர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த திங்கட்கிழமை மீண்டும் கைது செய்தது.

பிரேம் குமார் எனப்படும் குணா என்ற சி.குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா, தனுக்க ரொஷான், வெல்ல சுரங்க என்ற கமகே சுரங்க பிரதீப், திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.

No comments