வலி.வடக்கு புனர்வாழ்வு சங்க தலைவர் காலமானார்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார். 

மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம் , ஒரு சிறந்த புகைப்பட கலைஞனும் ஆவார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "பழங்கால புகைப்படங்களின் திருவிழா 2020" (Jaffna vintage Photo Festival-2020) நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். 

வலி. வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 32 வருட காலங்களுக்கு மேல் வசித்து வரும் நிலையில் தனது கடைசி காலம் வரையிலும்  , அந்த மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராடி வந்தவராவார் 

மயிலிட்டியை சேர்ந்த 700 மீனவகுடும்பங்களும் பலாலியை சேர்ந்த 2000ம்  குடும்பங்களும் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றன எனவும் , நாங்கள் உயிர் பிழைப்பதற்காக இந்த நிலங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என போராடி வந்த குணபாலசிங்கம், ஜனாதிபதியை சந்தித்து,  எங்கள் துயரங்களை முன்வைப்பதற்காக வாய்ப்பை வழங்கவேண்டும் என கடந்த ஒக்டோபர் மாதம் கோரிக்கையை முன் வைத்திருந்தார். 

அவரது கோரிக்கை நிறைவேறாத நிலையிலையே , அவர் காலமாகியுள்ளார். 

No comments