யாழ். பல்கலையில் மார்கழிப் பெருவிழா!


யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. 

இலங்கை கலைஞர்கள்,  இந்திய கலைஞர்கள் இணைந்து தங்களுடைய கலைத் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. 

நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்த மார்கழிப் பெருவிழா தொடர்ந்து இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட அரசியல் சிவில் சமூக வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.No comments