"எமது நிலம் எமக்கு வேண்டும்" - கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தி ல் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின் முன்பாக இடம்பெற்றது.

இதன் போது, எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும் , கோசங்களை எழுப்பிவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
No comments