மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாம்!
நிலக்கரி கப்பல்கள் மூன்று எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழமை நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரி இருப்புக்களை ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் எதிர்வரும் வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ளது. 

இதன்படி, ஜனவரி 5, 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கிடைக்கப்பெறும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

No comments