சாந்தன், ரொபேட், ஜெயக்குமார்: இலங்கைக்கு திரும்புகிறனர்!

 


சாந்தன், ரொபேட், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் 10 நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை இடம்பெறுவதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

சாந்தன் என்னும. சுரேந்திரராயா மற்றும் ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் 10 நாள்களிற்குள் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இவர்கள் தற்போது  இலங்கை அகதிகளிற்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அனைவரும் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் முருகன் என்னும் சிறீகரன் தான்  பிரித்தானியா செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதனால் அவரை  அங்கு அனுப்புவதற்கான முயற்சி இடம்பெறுகின்றது.  இதற்காக பிரித்தானிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் பதிலிற்காக காத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments