யாழில் வாடகைக்கு பெற்று விற்கும் கும்பல்!


யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணம் சுன்னாகம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எனினும் இன்று வரை நான்குக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது 

நேற்று முன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று 20 லட்சம் ரூபாய் விற்கு அடகு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நெல்லியடி பகுதியில் பதிவாகியுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது 

No comments