2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு!

 


2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

ப்ளோரிடா மாகாணத்தில் உரையாற்றும்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2016 இல் நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிபராக வெற்றிப் பெற்ற  டிரம்ப், பிறகு 2020 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இப்போது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்து உள்ள டிரம்ப் முதலில் அவருடைய குடியரசுக் கட்சி உறுப்பினர்களினால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அந்தக் கட்சியில் ப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் அவருக்கு போட்டியாளராக இருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

No comments