மாவீரர்நாள் விளக்கவுரையும் இளையோர் கருத்தரங்கும்.

12.11.2022 இன்று  டென்மார்க் கிளையின் ஒழுங்குபடுத்துதலில் ஈகாஸ்ட் நகரில் மாவீரர்நாள் விளக்கவுரையும் இளையோர் கருத்தரங்கும் மிகத் தெளிவான

திட்டமிடலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் 45  இற்கும் அதிகமான இளையோர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். 

நிகழ்வில், மாவீரர் நாள் நடத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான நடைமுறைகளையும் வரலாற்று ரீதியாகவும், இளையோருக்குப் புரியும் வகையிலும் எடுத்துரைக்கப்பட்டது. 

தொடர்ந்து தமிழர் நாம் எதிர்கொள்ளும் 

சமகாலச் சவால்கள் தொடர்பில் இளையோர்களது பார்வை எவ்வாறு உள்ளது, அதனை நாம் எவ்வாறு கையாள்வது என்பது சார்ந்த விடயங்களும் கலந்தாலோசிக்கப் பட்டன. இறுதியாக "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.


No comments