புத்துவெட்டுவான் மருதங்குளம் வான் பாய்கின்றது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்சசியாக பெய்துவரும் கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிக்கொண்டிருக்கின்றன

இந்நிலையில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட, புத்துவெட்டுவான் மருதங்குளம்வான் பாய்கின்றது

குறித்த மருதங்குளமானது சுமார் 9.5 அடிக்கு நீரை தேக்கிவைத்திருக்கக்கூடிய குளமாகும், அண்மைய நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது

அதேவேளை இவ்வாறு வெளிச்செல்லும்  நீரானது, பாதுகாப்பாக அக்கராயன் குளத்தினைச் சென்றடையுமெனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும்

வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் கை.பிரகாஸ் தெரிவித்தார்.

செய்தி: ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 


No comments