யாழில் நகரில் அனைத்து போக்குவரத்துகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமானது
யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார்
பயணிகள் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.பேருந்து நிலையத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவணணன், யாழ் மாநகர ஆணையாளர் இ த.ஜெயசீலன், தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிகள், பொலிசார் இது தொடர்பில் கலந்துரையாடியதுடன் தற்போதுள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்தனர்.
யாழ் நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது சேவைகளை ஆரம்பித்த அனைத்து தனியார் சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கும் யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிசாருக்கும் யாழ் மாநகர முதல்வர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்போதைய போக்குவரத்து சேவைகளில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை இனங்கண்டு அடுத்த வாரம் அது தொடர்பில் ஆராய்ந்து இத் திட்டத்தனை மேம்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனியார் பேருந்துகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுவதால் யாழ் நகரப் பகுதி குறிப்பாக ஆஸ்பத்திரி பின் வீதி மணிக்கூட்டுக்கோபுர வீதி வாகனங்களில் குறைவாக இருந்ததுடன் நெரிசலின்றியும் பயணிக்க கூடியதாக காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
செய்தி: பு.கஜிந்தன்
Post a Comment