புதுச்சோியில் நடைபெற்ற மாவீரர் நாள்


புதுவை கப்டன் மில்லர் அரங்கில் திராவிடர் விடுதலைக்கழகம்  தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று (27/11/2022) அனுசரிக்கப்பட்டது. 

தமிழீழ மறவர்களுக்கு உதவிய காரணத்தால் அடக்குமுறை சட்டங்களான  தடா, பொடா வழக்குகளை நேர்கொண்ட தமிழீழ ஆதரவாளர் இந்திய ஒன்றிய மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும், மனித உரிமைப் போராளி அற்புதம்மாள் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 

ஈகியர் நினைவெழுச்சி சுடரை சுப்புலட்சுமி அவர்கள் ஏற்றினார். தமிழீழ தேசிய கொடிக்கு அற்புதம்மாள் அவர்கள் மாண்பு செய்தார். 

தமிழீழ மக்கள் அரசியலாளரும், மேனாள் வடக்கு மாகாண அமைச்சருமான ஆனந்தி சசிதரன் பார்வையாளராக கலந்துகொண்டார். 

முதல் மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட மாதிரி நடுகளுக்கு புதுவை திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு அய்யப்பன் அவர்களின் தலைமையில் மலர் மரியாதை செய்யப்பட்டது. 

மாவீரர் நாள் நிகழ்வில் பெருந்திரளாக புதுவை அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தன்னார்வத்தோடு கலந்து தமிழீழப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

No comments