வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி தொடருந்து, ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு தொடருந்து மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தொடருந்து இயந்திரம் மற்றும் அதை ஒட்டிய இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் தொடருந்து பாதைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இரண்டு இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments