வவுனியா பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு: 14 பேர் காயம்!!
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே குறித்த விபத்தில் உயிரிழந்த ஒருவர் யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த 23 வயதான இராமகிருஷ்ணன் சயாகரி என தெரியவருகிறது.
அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment