பாலியல் வன்கொடுமை: நீதிமன்றில் பிணை மறுப்பு: விளையாடத் தடை!!
பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது அந்நாட்டு ஸ்ரீ லங்கா துடுப்பாட்ட நிறைவேற்றுக்குழு.
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான 29 வயது ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிட்னி காவல்துறையினரால் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டார்.
31 வயதாகும் குணதிலகாவிற்கு இலங்கை அணியில் இனி இடமில்லை என அந்நாட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கையினை அவுஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து அவர் தொடர்ந்தும் காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கைவிலங்குடன் சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் தனுஷ்க குணதிலக்க நீதின்றில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, அவர் ஒரு திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காவல்துறையும் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.
Post a Comment