நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிப்பு


ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து உடைமைகளுடன் வெளியே வந்தார் நளினி.

31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த உடன், சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து நளினி விடுவிக்கப்பட்டார்.

நளினியைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைத் தமிழர்கள் என்பதால், திருச்சி இலங்களை தமிழர்கள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ராஜீவ் கொலை வழக்கில், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.

அதேபோல், நளினியின் கணவர் முருகன் மீது சிறையில் பெண் அதிகாரியிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவரது விடுதலை மட்டும் தாமதமாகும் என கூறப்படுகின்றது.

No comments