யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது


யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் மீது போத்தல் ஒன்றினை வீசி தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

அது தொடர்பில் யாழ். பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் கார் ஒன்றில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்ததை அடுத்து , காரினை அடையாளம் கண்டு மூவரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

 செய்தி: ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 


No comments