ஆஸ்ரேலியாவிலிருந்து சென்றவர் மீது பண்டத்தரிப்பில் வாள்வெட்டு!


யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ஆஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டதுடன் ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments